என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » முன்னாள் ஏர் இந்தியா தலைவர்
நீங்கள் தேடியது "முன்னாள் ஏர் இந்தியா தலைவர்"
பொது மேலாளர் பதவிகளுக்கு ஆட்களை நியமிக்க லஞ்சம் வாங்கிய வழக்கில் முன்னாள் ஏர் இந்தியா தலைவர் அர்விந்த் ஜாதவ் உள்பட மூத்த அதிகாரிகள் மீது சிபிஐ இன்று வழக்குப்பதிவு செய்துள்ளது. #CBI #AirIndia #CorruptionCase
புதுடெல்லி:
ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் கடந்த 2009 -10ம் ஆண்டுகளில் பொது மேலாளர் பதவி உள்பட பல்வேறு பதவிகளுக்கான ஆட்களை நியமனம் செய்யும் பணி நடைபெற்றது. அப்போது முறைகேடு செய்து ஆட்களை நியமனம் செய்துள்ளதாக முன்னாள் அதிகாரிகள் மீது புகார் எழுந்தது. புகார் தொடர்பாக சிபிஐ விசாரித்து வந்தது.
இந்நிலையில், பொது மேலாளர் பதவிகளுக்கு ஆட்களை நியமிக்க லஞ்சம் வாங்கிய வழக்கில் ஏர் இந்தியா முன்னாள் தலைவர் அர்விந்த் ஜாதவ் உள்பட மூத்த அதிகாரிகள் மீது சிபிஐ இன்று வழக்குப்பதிவு செய்துள்ளது.
மேலும், இதுதொடர்பாக ஓய்வுபெற்ற பொது மேலாளர் எல்.பி. நக்வா, முன்னாள் கூடுதல் பொது மேலாளர்கள் கத்பாலியா, அமிதாப் சிங் மற்றும் ரோஹித் பாசின் உள்பட 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. #CBI #AirIndia #CorruptionCase
×

X